பசுமை நடவடிக்கைகளுக்கு அரசாங்க மானியங்கள்

1 mins read
e6334073-3ba0-4e31-be32-6f5d8885c405
-

இந்த ஆண்டு பசுமை நடவடிக்கை களை நடத்த திட்டமிடும் ஆர்வலர் குழுக்கள், அரசாங்க சார்பற்ற மற்றும் அடித்தள அமைப்புகள் ஆகியவை நிகழ்ச்சி ஏற்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து அர சாங்க மானியங்களுக்கு விண் ணப்பிக்கலாம். இம்மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது பருவநிலை நடவடிக்கை சிங்கப்பூர் மானியம் பற்றி அறி வித்த சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், நேற்று அது பற்றிய மேல் விவரங் களைத் தெரிவித்தார். 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் நேற்று நடைபெற்ற 'ஜஸ்ட் ஒன் எர்த்' எனும் சிறுவர் கேளிக்கை விழாவில் பேசிய டாக்டர் கோர், இவ்வாண்டு இறுதி வரை பசுமை நடவடிக்கைகளை நடத்தும் குழுக்கள் தேசிய சுற்றுப்புற வாரி யத்திடம் மானியங்களுக்கு விண் ணப்பிக்கலாம் என்றார்.

ஒவ்வொரு குழுவும் தான் நடத் தும் பசுமை நடவடிக்கைகளுக் கான கணக்குகளை நிகழ்ச்சிக்குப் பிறகு சமர்ப்பித்து, $5,000 வரை மானியங்களைப் பெறலாம் என்று விளக்கப்பட்டது.

'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் நேற்று நடைபெற்ற 'ஜஸ்ட் ஒன் எர்த்' கேளிக்கை விழாவில் களிமண்ணைக் கொண்டு உருவங்களைச் செய்ய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்