'கார்களில்லா ஞாயிறு' வழக்க மாக செயல்படுத்தப்படும் பகுதி யில் இல்லாமல் முதன் முறையாக ஒன் நார்த் பகுதியில் அடுத்த மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. சிங்கப்பூரின் முதல் வே லை - வா ழ் க் கை - வி ளை யாட்டு-கல்வி பேட்டையான ஒன் நார்த் பகுதியில் அடுத்த மாதம் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் வரை 'கார்களில்லா ஞாயிறு' நிகழ்ச்சியை ஜேடிசி, நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியன ஏற்பாடு செய்கின்றன. ஒன் நார்த் பகுதியில் கார் களின் பயன்பாடு குறைப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்படுவதாக ஜேடிசியும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தங்களது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளன.
அன்றைய தினம் காலை பகுதியாகவோ அல்லது முழுவது மாகவோ சாலைகள் மூடப்பட்டு சைக்கிளோட்டிகள், மெதுவோட் டக்காரர்கள், நடையர் போன்றோர் சாலைகளைப் பயன்படுத்து வதற்கு வசதிகள் செய்யப்படுவது டன் மொத்தமுள்ள 200 ஹெக்டர் பரப்பளவிலும் அனைவரும் பங் கேற்கும் விதத்தில் பல நடவடிக் கைகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மூன்றாவது ஆண்டாக மாதத் தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'கார்களில்லா ஞாயிறாக' அனு சரிக்கப்படுகிறது. நகர மறுசீர மைப்பு ஆணையத்தினால் தொடங்கப்பட்ட இந்த முயற்சியை சமூக அமைப்புகள் ஆதரித்து வருகின்றன.

