கொள்ளை முயற்சியில் ஆடவர் கைது

கொள்ளை முயற்சியில் ஆடவர் கைது

1 mins read

பிடோக் ரெசர்வார் ரோட்டில் கொள்ளை அடிக்க முயன்றதாக 53 வயது ஆடவரை போலிசார் கைது செய்தனர். பிடோக் ரெசர்வார் ரோட்டில் உள்ள புளோக் 745ல் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு பெண் நேற்று காலை 9.15 மணியளவில் பணம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஆடவர் ஒருவர் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக போலிசில் புகார் செய்யப்பட்டது. பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் கண்டனர். சம்பவ இடத்தில் இருந்து 200 மீ. தூரத்தில் காலை 10.40 மணிக்கு ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.