திறம்பட உதவிட சேவைக் குழுக்கள் ஒருங்கிணைப்பு

திறம்பட உதவிட சேவைக் குழுக்கள் ஒருங்கிணைப்பு

1 mins read

உதவி தேவைப்படும் தனிநபர் களுக்கும் குடும்பங்களுக்கும் உதவியை இங்கொன்றும் அங் கொன்றுமாக வழங்காமல் உள்ளூர் சமூகக் குழுக்களுடன் ஒருமுகப் படுத்தி வழங்க வேண்டும். உதவி தேவைப்படுவோருக்கு திறம்பட உதவிபுரிய சேவைக் குழுக்கள் ஒன்றையொன்று தெரிந்து கொண்டு ஒன்றுசேர்ந்து பணிபுரிய வேண்டும் என்பதாலேயே கலந் துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப் படுவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று கூறினார்.

அவரது அமைச்சின்கீழ் வரும் சமுதாய சேவை அலுவலகங்கள் ஒவ்வொரு துணை நகரமாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு நடத்தும் என ஹெண்டர்சன்-டாசன் வட்டாரத் தைப் பார்வையிடச் சென்றபோது செய்தியாளர்களிடம் அவர் தெரி வித்தார். குடும்ப சேவை நிலையங்கள், அடித்தள அல்லது தொண்டூழிய நலவாழ்வு அமைப்புகள் போன்ற குழுக்களின் அடித்தளப் பிரதிநிதி கள் ஒன்றாகக் கூடி, நண்பர்களாக வேண்டும் என்று அவர் கூறினார். அந்தச் சமயத்தில் அவர்களது அமைப்புகள் என்னென்ன திட்டங் களை நடத்துகின்றன, அவற்றில் உள்ள குறைபாடுகள் என்ன என்பதைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்றார் அவர்.