38 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 63 வயது சியாவ் லாம் செங் நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கி வைத்திருந்ததாக அவர் மீது நேற்று குற்றச்சாட்டு பதிவானது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சியாவ்வுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். கடந்த வியாழக் கிழமையன்று மலேசிய போலி சாரால் சியாவ் பினாங்கில் கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவர் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்.
1980ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று தஞ்சோங் காத்தோங் சாலையில் சியாவ்வும் லீ ஆ ஃபாட் என்ற ஆடவரும் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததை போலிஸ் அதிகாரிகள் கவனித்ததாகவும் அவர்களைச் சோதனை செய்ய அவர்கள் முடிவெடுத்ததாகவும் சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.
பிற்பகல் 2.30 மணி அளவில் சின் போ போ மதுபானக்கூடத் துக்குப் பக்கத்தில் இருந்த படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த சியாவ் தமது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து போலிஸ் அதிகாரிகளை நோக்கி குறிவைத் ததாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பார்த்த போலிஸ் அதிகாரி ஒருவரும் தமது துப்பாக்கியை எடுத்து சியாவ்வைக் குறிவைத்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதிலும் லீ ஆ ஃபாட் போலிஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து மல்லுக்கட்டியதாக நம்பப்படுகிறது. அப்போது நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்தி சியாவ் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த லீ ஆ ஃபாட் உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
சியாவ் லாம் செங்

