58 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் மாயஜாலக் கலைஞர்

58 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் மாயஜாலக் கலைஞர்

1 mins read
3e82465d-64d6-4dc9-b6c1-1c77c2efa326
-

வருமான வரிச் சட்டத்தின்கீழ் மாயஜாலக் கலைஞர் எஸ்.சந்திரன் (படம்) மீது நேற்று 58 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டன. சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ள ஆகப் பெரிய மோசடி வழக்குகளில் இதுவும் ஒன்று என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறு கின்றனர். சட்டவிரோதமான முறையில் $1.1 மில்லியன் பெறுமானமுள்ள உற்பத்தித் திறன், புத்தாக்க வரிச் சலுகையைப் (பிஐசி) பெற 49 பேருக்கு அவர் உதவியதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் இது வரை சந்திரனின் மனைவியான ஏ.கே. சத்யா உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. மகேந்திரன் ராஜு, சாந்தி, கிறிஸ்டல் பிரியா ஆகியோர் பிஐசியைப் பெற தகுதியானர்கள் என்று பொய் கூறி மொத்தம் $73,818 பெற சந்திரன் உதவிய தாகவும் கூறப்படுகிறது. உள்நாட்டு வருவாய் ஆணை யம் விசாரித்தால் எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று உடந் தையாக இருந்தோரை சந்திரன் தயார் செய்ததாகக் கூறப்படுகிறது.

ST PHOTO: WONG KWAI CHOW