யீ‌ஷூனில் விபத்து: மருத்துவமனையில் 9 பேர்

யீ‌ஷூனில் விபத்து: மருத்துவமனையில் 9 பேர்

1 mins read
ccf42d4f-e9a3-43a4-b9e3-23d69bdefc1e
-

யீ‌ஷூன் வட்டாரத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நேற்று முன் தினம் இரவு யீ‌ஷூன் வட்டாரத்தில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. அவற்றில் மூன்று கார்களும் ஒரு டாக்சியும் அடங்கும். யீ‌ஷூன் அவென்யூ 2க்கும் யீ‌ஷூன் அவென்யூ 7க்கும் இடையே உள்ள போக்குவரத்து சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நேற்று முன் தினம் இரவு 7.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் போலிசார் தெரிவித்தனர்.

"மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஏழு ஆடவர்களும் இரண்டு பெண்களும் அடங்குவர். அவர் கள் 18 வயதிலிருந்து 69 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர் களை கூ டெக் புவாட் மருத்து வமனைக்குக் கொண்டு சென்ற போது அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர்," என்று போலிஸ் செய்தித் தொடர் பாளர் கூறினார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

விபத்தில் சேதமடைந்த கார். படம்: வான்பாவ்