$37 மில்லியன் மோசடி: மாதுக்கு12 ஆண்டுசிறை

$37 மில்லியன் மோசடி: மாதுக்கு12 ஆண்டுசிறை

1 mins read
44c0e1bb-07cb-4db9-8e5a-6676689734bc
-

கெப்பல் மன்ற உறுப்பிய மோசடி யின் 'மூளை'யான 71 வயது சீத்தோ வீ லின்னுக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மன்றத்தின் பொது நிர்வாகியின் உதவியாளராக இருந்த சீத்தோ, மன்ற உறுப்பியம் வாங்கி தருவதாகப் பொய் சொல்லி 1,341 பேரிட மிருந்து ஏறத்தாழ $37.5 மில்லி யன் ஏமாற்றினார். இந்தக் குற்றத்தை அவர் 2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை புரிந் தார். சீத்தோ ஐரீன் என்றும் அழைக் கப்படும் அந்தப் மாதுக்கு ஏமாற்றிப் பறிக்கப்பட்ட பணத்திலிருந்து குறைந்தது $11 மில்லியன் கிடைத்ததாக விசாரணையில் தெரிய வந் துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதியன்று அவர் மீது சுமத்தப்பட்ட 60 குற்றச் சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார். மருத்துவ சிகிச்சை பெற அவருக்கு $300,000 பிணை வழங்கப்பட்டது. சீத்தோ தமது சிறைத் தண்ட னையை மே மாதம் 7ஆம் தேதியன்று தொடங்குவார். சீத்தோவுக்கு முதுகு எலும்புப் பிரச்சினையும் நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் இருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்றத்திடம் $3.65 மில்லியனைத் திருப்பிக் கொடுக்க சீத்தோ நேற்று முன்தினம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

சீத்தோ வீ லின். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை