போலியான செய்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய நூலக வாரியம் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. சமூகம் முழுவதும் பகுப்பாய்வுச் சிந்தனையைப் பரவச் செய்ய அது தன் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறது. நூலகத்தின் இயக்குநர் வாய் யின் ரைக் நேற்று இவ்வாறு தெரி வித்தார்.
"தகவல் தொடர்பான ஆற்றல் என்பது நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. "செய்தி மூலத்தைப் பரிசோதிப் பது, தகவலைப் புரிந்துகொள்வது, ஆழமாக ஆய்வு செய்வது, தகவலைப் பகுப்பாய்வு செய்து மதிப்பிடுவது ஆகியவை அந்த நான்கு அம்சங்கள்," என்று இணையத்தில் பொய்ப் பிரசாரங் கள் தொடர்பான தெரிவுக் குழு முன்னிலையில் பேசிய திருவாட்டி ரைக் குறிப்பிட்டார். "மக்கள் வேலையில், பள்ளிக் கூடத்தில், விளையாட்டில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு ஏராள மான தகவல்கள் கிடைக்கின்றன.
"இந்தச் சூழலில் பகுப்பாய்வுச் சிந்தனைத் திறன் என்பது மிக முக்கியமானதாக ஆகியிருக் கிறது," என்று அவர் தெரிவித்தார். தேசிய நூலகம் தகவல் அறிவு பற்றிய பொதுமக்களின் புரிந் துணர்வை அதிகரிப்பதற்காக 2013ல் SURE (மூலம், புரிந்துணர் தல், ஆய்வு, மதிப்பீடு) என்ற இயக்கம் ஒன்றைத் தொடங்கியது. கல்வி அமைச்சுடன் சேர்ந்து செயல்பட்டு பள்ளிக்கூடங்களுக் குப் பாடபோதனை வளங்களை அது உருவாக்கியது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியவர்களுக்குப் பயிலரங்கு களை அது நடத்தியது.

