அரசாங்கம் சாரா வல்லுநர்களைக் கொண்ட சுதந்திரமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினால் அது இணையத்தில் இடம்பெறும் பொய்ப் பிரசாரங்களை உத்திபூர்வ மான முறையில் சமாளிக்கத் தேவையான அதிகாரங்களை சிங்கப்பூர் கொண்டிருக்க உதவும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியைச் சேர்ந்த மூத்த ஆய்வாளரான பெஞ்சமின் ஆங், இணையத்தில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரம் தொடர்பான தெரிவுக் குழு முன்னிலையில் கருத்துகளைத் தெரிவித்தார்.
பொய்யான ஒரு செய்தி, பெரியளவில் இடம்பெறும் தகவல் பிரசாரத்தின் உண்மையான ஓர் அங்கமாக இருக்கிறதா என்பதை அடையாளம் காண இத்தகைய அமைப்பு உதவும் என்று அவர் கருத்துரைத்துள்ளார். பொய்யான தகவல்கள், பரந்த அளவில் இடம்பெறும் ஓர் இயக் கத்தின் அங்கமாக இருக்கும் பட் சத்தில், உத்திபூர்வமான பதிலடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று எழுத்து மூலமான தனது அறிக்கையில் திரு ஆங் குறிப் பிட்டார். பொய்யான செய்திகள் தொடர்பில் சிங்கப்பூர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ப தற்கு வழிகாட்டக்கூடிய கோட்பாடு களை திரு ஆங் தெரிவுக் குழு முன்னிலையில் முன்வைத்தார்.
ஒளிவுமறைவு இல்லாத, தொடர்ச்சியான தகவல் தொடர்பு மூலம் நம்பிக்கையைப் பலப்படுத்து வது, ஊடகம் பற்றிய அறிவை பலப்படுத்துவது ஆகியவை இவற் றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரை சீர்குலையச் செய் யும் நோக்கத்தில் அரசாங்கமோ அல்லது அரசாங்கம் சாராத இதர அமைப்புகளோ இணையத்தில் கிளப்பிவிடும் பொய்ப் பிரசாரங்கள் தேசிய பாதுகாப்பு மிரட்டலாகக் கருதப்படும் என்றார் அவர். அத்தகைய மிரட்டல்களை அர சாங்கம் சமாளிக்க வேண்டும் என்று தெரிவுக் குழுவிடம் திரு ஆங் தெரியப்படுத்தினார்.
எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் பெஞ்சமின் ஆங், நேற்று தெரிவுக் குழு முன்னிலையில் தன்னுடைய கருத்துகளை முன்வைத்தார். படம்: GOV.SG

