கடலில் இரவில் தத்தளிப்பு: 9 பேரை மீட்ட சிங்கப்பூர் படகு

கடலில் இரவில் தத்தளிப்பு: 9 பேரை மீட்ட சிங்கப்பூர் படகு

2 mins read
335bff06-6e9c-4ecf-b177-e6e645788960
-

கடலில் ஒரு விபத்தையடுத்து ஒன்பது பேரை சிங்கப்பூர் படகு காப்பாற்றியது. 'சன்லைட் போசி டோன்' என்ற 18மீ. நீளம், 4மீ. அகலம் உள்ள சரக்குப் படகு வியாழக்கிழமை இரவு பெஞ்சுரு முனையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. பக்கத்தில் இருக்கும் ஒரு துறையில் சரக்குகளைக் கொண்டு இறக்க அந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது இரவு சுமார் 10.30 மணிக்குக் கடலில் ஒரு சிறு படகு தத்தளித்துக்கொண்டு இருந்ததை அது பார்த்தது.

சரக்குப் படகின் தலைவரான ஷார்ஜஹான், உதவிக்கு யாரோ சத்தம் போடுவதைக் கேட்டார். கடலில் யாரோ கைகாட்டியதும் அவருக்குத் தெரிந்தது. உதவி கேட்டு குரல் வந்ததை அடுத்து அவர்களைக் காப்பாற்ற ஷார் ஜஹான் முடிவு செய்தார். நான்காண்டு கடலோடி அனு பவம் பெற்றிருக்கும் ஷார்ஜஹா னும் படகில் இருந்த மற்றவர் களும் சேர்ந்து 20 நிமிடங்களில் ஒன்பது பேரையும் மீட்டனர். இதனிடையே, ஈஸ்ட் ஜூரோங் சேனலில் வியாழக்கிழமை 10.25 மணிக்கு 'சமுத்ரா இண்டா' என்ற இந்தோனீசியாவில் பதியப் பட்ட ஒரு கலனும் 'எக்ஸ்புளோரர்' என்ற சிங்கப்பூரில் பதியப்பட்ட கப்பலும் விபத்துக்குள்ளானதாக தனக்குத் தகவல் வந்தது என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது.

அந்த விபத்தில் சிக்கிய இரண்டு கப்பல்களுக்கும் சேதம் இல்லை. அதில் யாரும் காயம் அடையவில்லை. கடலில் எண்ணெய்த் தூய் மைக்கேடும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. புலன் விசா ரணை தொடர்கிறது.

சமுத்ரா இண்டா கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரும் பலவீனமாகவும் நடுங்கிய நிலையிலும் காணப்பட்டனர். படம்: முகம்மது ஷார்ஜஹான்