இணையத்தில் பொய்ப் பிரசாரம் பரவுவதைச் சமாளிக்க புதிய சட்டங்களை ஏற்றும்போது கவன மாக இருக்கவேண்டும் என்று கல்வித் துறையாளர் செரியன் ஜார்ஜ் வலியுறுத்தி இருக்கிறார். பாரபட்சத்தைத் தூண்டிவிடக் கூடிய விரோதமான கருத்துகளை அவதூறு மற்றும் குற்றச்செயலில் இருந்து பிரித்து பார்க்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் தண்டனை விதித் தொகுப்பு 298வது பிரிவு அவதூறு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். விரோதமான கருத்து கள் தெரிவிக்கப்படும்போது அதன் தொடர்பில் உறுதியான நட வடிக்கை எடுக்கவேண்டும் என் றாலும் அதற்கு எப்போதுமே கிரி மினல் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் செரியன் ஜார்ஜ் கருத்துரைத்தார்.
சகித்துக்கொள்ள முடியாத கருத்துகளை எதிர்க்கக்கூடிய சமூகத்தைப் பேணி வளர்ப்பதே விரோதப் பிரசாரத்திற்கு எதிரான வலுவான உத்திரவாதமாகத் திக ழும் என்றார் டாக்டர் ஜார்ஜ். அத்தகைய சட்டத்தை தவறான சூழ்நிலையில் பயன்படுத்தினால் அந்தச் சட்டம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிட முடியும். அரசியல் எதிரிகள் அதை ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அவர் கருத்துக் கூறினார். இணையத்தில் பொய்ப் பிர சாரங்கள் வேண்டுமென்றே பரப்பப் படுவது தொடர்பான பொது விசா ரிப்பில் நேற்று டாக்டர் ஜார்ஜ் கருத்துகளை முன்வைத்தார்.
ஹாங்காங் பேப்டிஸ்ட் பல் கலைக்கழகத்தில் ஊடக ஆய் வுத் துறை பேராசிரியராக இருக் கும் டாக்டர் ஜார்ஜ், எந்தவொரு புதிய சட்டத்தையும் மிகவும் கவனமாக இயற்ற வேண்டும் என்று கூறினார். சட்டங்களைப் பயன்படுத்தி, ஏற்கெனவே சட்டபூர்வமாக இருக்கின்றவற்றை சட்டவிரோத மானவையாகக் குறிப்பிடக்கூடிய புதிய சட்டவிரோத பேச்சு வகை களை உருவாக்கக்கூடாது என் றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் அவதூறு சட்டத்தை ரத்து செய்யவேண் டும் என்று டாக்டர் ஜார்ஜ் கூறிய கருத்துக்கு பதிலளித்துப் பேசிய தெரிவுக் குழு உறுப்பினர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, அந்தச் சட்டம் இல்லை என்றால் இத்தகைய பிரச் சினைகளை ஆயுதமாக ஒருவர் பயன்படுத்துவதைத் தடுக்க முடி யாமல் போய்விடும் என்றார்.
ஹாங்காங் பேப்டிஸ்ட் பல்கலைக் கழகத்தில் ஊடக ஆய்வுத் துறை பேராசிரியராக இருக்கும் டாக்டர் செரியன் ஜார்ஜ், நேற்று தெரிவுக் குழு முன்னிலையில் தன் கருத்துகளையும் யோசனை களையும் முன்வைத்தார். படம்: GOV.SG

