வடகொரியர்களின் 'வொர்க் பர்மிட்' ரத்து

வடகொரியர்களின் 'வொர்க் பர்மிட்' ரத்து

1 mins read

சிங்கப்பூரில் பணியாற்றிய அனைத்து வடகொரியர்களின் வேலை அனுமதிச்சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இனிமேல் வடகொரிய நாட்டவர் யாருக்கும் புதிதாக வேலை அனுமதிச்சீட்டு வழங்கப்படாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தடைவிதிப்புக் குழுவிடம் சிங்கப்பூர் கடந்த வாரம் சமர்ப்பித்த அமலாக்க அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானத்தின்படி தான் எடுத்த நடவடிக்கைகளை சிங்கப்பூர் தனது அறிக்கையில் பட்டியல் இட்டுள்ளது.

சென்ற ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்த்தது. அதற்குக் கண்டனம் தெரிவித்த ஐநா பாதுகாப்புச் சபை, அந்த நாட்டிற்கு எதிராக 2017 டிசம்பர் 22ஆம் தேதி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது. அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளுக்கு ஆதரவு தரும் நோக்கில் வடகொரியர்கள் வெளிநாடுகளில் வேலைசெய்து, பொருளீட்டக்கூடும் என்று அது கவலை தெரிவித்தது.