'புதிய சட்டம் பேச்சுரிமைக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது'

'புதிய சட்டம் பேச்சுரிமைக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது'

1 mins read

இணையத்தில் வேண்டுமென்றே பொய்யுரைக்கும் பிரச்சினையைச் சமாளிக்க அறிமுகமாகும் எந்த ஒரு புதிய சட்டமும் பேச்சுரிமைக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேரா சிரியர் யூஜின் டான் கூறியுள்ளார். "எந்தவொரு புதிய சட்டமும் சட்ட ஆளுமைக்கு உட்பட்டிருப்ப தோடு, திடமான பொது பேச்சுரி மையை ஒடுக்கும் வகையிலோ தணிக்கையை அமலாக்கி அர சியல் எதிர்ப்பை நசுக்கும் வகை யிலோ சட்டங்கள் வடிவமைக்கப் படவில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்," என்று இணை யப் பொய் பிரசாரம் தொடர்பான தெரிவுக் குழுவிடம் சமர்ப்பித்த எழுத்துபூர்வ அறிக்கையில் திரு டான் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினைக்கு அவர் பன் முனை அணுகுமுறையையும் பரிந் துரைக்கிறார். 'ஆபத்து தெளிவாக இருக்கும்' சூழ்நிலைகளில் சட்டம் பயன்படுத் தப்படலாம் அல்லது காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட்டு, சமூக ஊடகங் கள் தவறாகப் பயன்படுத்தப்படு வதைத் தடுக்கலாம் என்றார் அவர். ஆனால், 'வேண்டுமென்றே வெளியிடப்படும் பொய்யுரைகளை எதிர்த்துப் போராடத் தேவையான அடிப்படை ஆற்றலும் ஆதரவு திரட்டலும்' முடக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம் என அவர் எழுதியிருந்தார்.