புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் பாதிப்பு

புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் பாதிப்பு

1 mins read
65aa2465-cc2c-4835-97b9-abb0f6420d91
-

ஈராண்டுகளுக்குமுன் இந்தியா சென்றிருந்தபோது இணையத் தளம் ஒன்றில் வெளியான ஒரு கட்டுரை பற்றி தம் நண்பர்கள் மூலம் அறிந்தார் திரு பிரகாஷ் ஹேதம்சரீயா. தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் திரு பிரகாஷ், "ஏமாற்றப்பட்டதாகக் கருதும் புதிய சிங்கப்பூர் குடிமகன், இப் போது தமது பழைய குடியுரிமை யைப் பெற விரும்புகிறார்," எனும் தலைப்பில் தமது புகைப்படத்து டன் அந்தக் கட்டுரை வெளியாகி இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

உடனடியாக 'தமது படத்திற் கும் அக்கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று இவர் சமூக ஊடகம் வழியாகத் தெளிவுபடுத்தினார். ஆனாலும் அதற்கு முன்பே, முன்பின் தெரி யாத பலர், தம் மீதும் தம்முடைய மனைவி, மகள் மீதும் வெளி நாட்டவர் மீதான கடும் வெறுப்பு உணர்வைக் காட்டும் கருத்து களைப் பதிவிட்டிருந்ததை திரு பிரகாஷ் நினைவுகூர்ந்தார்.

திரு பிரகாஷ் ஹேதம்சரீயா (இடது), திரு ராஜ மோகன். படம்: gov.sg