வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் கிட்டத் தட்ட 900,000 சிங்கப்பூர் குடும் பங்கள் சேவை, பராமரிப்புக் கட் டணக் கழிவுகளைப் பெறவுள் ளன. இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அரசாங்கம் அறிவித்ததற்கு இணங்க அந்த $126 மில்லியன் பெறுமான சலுகைகள் ஏப்ரலில் இருந்து தொடங்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் வீட்டினர் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், அடுத்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களுக்கு வீட்டின் அளவைப் பொறுத்து மாறு பட்ட கட்டணக் கழிவுகளைப் பெறுவர் என நிதி அமைச்சு நேற்று கூறியது.
அந்தக் கட்டணச் சலுகை ஒன்றரை மாதம் முதல் மூன் றரை மாதம் வரை வெவ்வேறு வகையாக இருக்கும். ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போருக்கு மூன்றரை மாத கட்டணக் கழிவும் மூவறை, நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இரண்டரை மாத கட்டணக் கழிவும் கிடைக் கும். அதேநேரம் ஐந்தறை வீடு களில் வசிப்போர் இரண்டு மாதக் கழிவைப் பெறுவர்.
எக்சிக்யூட்டிவ் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிப் போர் ஒன்றரை மாதக் கட்டணக் கழிவு பெறுவர். வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள எந்தவோர் உறுப்பினருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகள் இருப்பின் சேவை, பராமரிப்புக் கட்டணச் சலுகைக்கு அந்தக் குடும்பம் தகுதி பெறாது. தகுதி பெறும் குடும்பங்கள் இம்மாத இறுதியிலிருந்து தங் களது கட்டணக் கழிவு குறித்து விவரங்கள் அடங்கிய கடி தத்தைப் பெறும்.

