சாங்கி அனைத்துலக விமான நிலையங்கள் (சிஏஐ) நிறுவ னம் நிர்வகிக்கும் இரு வெளி நாட்டு விமான நிலையங்க ளுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. ரஷ்யாவில் உள்ள சோச்சி அனைத்துலக விமான நிலை யம் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலைய விருதைப் பெற்றது. அதே விமான நிலையம் இரண்டு மில்லியன் பயணிக ளைக் கையாண்ட ஐரோப்பா வின் சிறந்த விமான நிலைய விருதையும் தட்டிச் சென்றது. அதே நாட்டில் உள்ள அனப்பா அனைத்துலக விமான நிலையம் ரஷ்யாவின் சிறந்த வட்டார விமான நிலைய விருதையும் விளாடிவோஸ் டோக் அலைத்துலக விமான நிலையம் ரூட்ஸ் ஏஷியா 2018 விருதையும் பெற்றுள்ளன.
ரஷ்யா, பிரேசிலில் உள்ள சாங்கி குழுமத்தின் விமான நிலையங்களுக்கு விருதுகள்
1 mins read

