போலிஸ் அதிகாரத்துடன் குடிநுழைவு அதிகாரிகள்

போலிஸ் அதிகாரத்துடன் குடிநுழைவு அதிகாரிகள்

1 mins read

போலிஸ் அதிகாரிகளுக்குத் துணையாக, வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளும் பாதுகாப்புப் பணி களை மேற்கொள்வர் என்று உள் துறை அமைச்சு அறிவித்துள்ளது. "சம்பவ இடத்திற்கு விரை வது, முதற்கட்ட விசாரணையில் ஈடுபடுவது, நிலைமையைக் கட் டுக்குள் கொண்டு வருவது ஆகிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சோதனைச்சாவடி களில் பாதுகாப்புச் சம்பவங்களை உடனடியாகக் கையாள்வதை உறுதி செய்ய உதவும்," என்று அமைச்சின் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. தேவைப்படின் சாங்கி விமான நிலையம் வழியாக இடைநின்று செல்லும் பயணிகள், சிங்கப்பூர் விசா கோரி விண்ணப்பித்துள் ளோர் ஆகியோரிடம் இருந்து புகைப்படங்கள், கடவுச்சீட்டு விவரங்கள், கைரேகை போன்ற தனிப்பட்ட அடையாளங்களைச் சேகரிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.