விளையாட்டு மருத்துவத்தில் புதிய இளநிலை பட்டய கல்வி

விளையாட்டு மருத்துவத்தில் புதிய இளநிலை பட்டய கல்வி

1 mins read

விளையாட்டு மற்றும் முதுமை சார்ந்த காயங்களுக்கான சிகிச் சையில் அதிகமான மருத்துவர் களுக்குப் பயிற்சியளிக்கும் வித மாக 'கிராஜுவேட் டிப்ளோமா இன் ஸ்போர்ட்ஸ் மெடிசின்' எனும் புதிய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாங்கி பொது மருத்துவமனை யும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் கூட்டாக இதை அறிமுகம் செய்தன.

வாரத்திற்குக் குறைந்தது மூன்று முறை உடற்பயிற்சி செய் யும் சிங்கப்பூரர்களின் எண் ணிக்கை 2001ல் 16 விழுக்காடாக இருந்தது. 2014ல் அந்த எண் ணிக்கை 38 விழுக்காடாக உயர்ந்தது 'ஸ்போர்ட் சிங்கப்பூர்' ஆய்வில் தெரியவந்தது. அதேபோல, 65 வயதைத் தாண்டும் சிங்கப்பூரர்களின் எண் ணிக்கை 2030ல் 900,000ஐத் தொடும் என எதிர்பார்க்கப்படு வதால் முதுமை சார்ந்த காயங் களால், நோய்களால் பாதிக்கப்படு வதும் அதிகரிக்கலாம். இதைச் சமாளிக்கப் போதிய மருத்துவ நிபுணர்கள் தேவை என்பதால் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இந்தப் புதிய, பட்டக் கல்விக்குப் பிந்திய ஓராண்டு பகுதி நேரப் பட்டயப் படிப்பு அறிமுகமாகிறது.