ஹாங்காங்கை முந்தும் சிங்கப்பூர்

ஹாங்காங்கை முந்தும் சிங்கப்பூர்

1 mins read

பன்னாட்டு நிறுவனங்கள் தங்க ளது ஆசியத் தலைமையகத்தை இந்த வட்டாரத்தில் அமைப்பது குறித்து ஆராயும்போது ஆசிய வர்த்தக மையத்திற்கான போட்டி யில் ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடிக் கும் என்று பொருளியல் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. "ஹாங்காங் பொருளியலில் சீனாவிற்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டது," என்று பொரு ளியல் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் டாக்டர் பே சுவான் கின் 'புளூம்பெர்க்' செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியின்போது குறிப்பிட்டார்.

ஏழாயிரம் பன்னாட்டு நிறுவனங் கள் உட்பட கிட்டத்தட்ட 37,400 அனைத்துலக நிறுவனங்களின் செயல்பாடுகள் சிங்கப்பூரை விட்டு வெளியே இருந்தாலும் அவற்றில் பாதிக்கு மேற்பட்டவை தங்களது ஆசிய பசிபிக் வர்த்தகங்களை சிங்கப்பூரில் இருந்தே மேற்கொள் வதாக வாரியத்தின் இணையத் தளம் கூறுகிறது. சிங்கப்பூர், முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது என்றார் டாக்டர் பே. "அதிகமான நிறுவனங்கள் தங்களது ஆசிய பசிபிக் அல்லது குறைந்தது சீனா தவிர்த்த ஆசிய பசிபிக் தலைமையகத்தை சிங்கப் பூரில் அமைத்துள்ளன," என்று டாக்டர் பே குறிப்பிட்டார்.