சமூக ஊடகத் தளங்களில் இடம் பெறக்கூடிய பதிவுகளை அகற்றி விடும்படி அத்தகைய தளங் களுக்கு உத்தரவிட முடியும் என்று சட்டத்துறை மாணவர்கள் தெரி வித்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட விவகாரங்களில் பாதகமான பதிவுகளை அகற்ற வில்லை என்றால் அத்தகைய தளங்கள் அதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் இடம் பெறக்கூடிய பதிவுகளை அந்தத் தளங்கள் கண்காணித்து வர வேண்டும் என்றும் அவர்கள் தெரி விக்கிறார்கள்.
இணையத்தில் பொய்ப் பிர சாரம் பரவுவதை சிங்கப்பூர் சமா ளிக்க இதுவே மிகவும் சாத்திய மான வழி என்று அவர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர். இணையத்தில் பொய்ப் பிரசாரம் தொடர்பிலான தெரிவுக் குழுவின் கடைசிநாள் விசாரிப்பில் வழக்கறிஞர் ஒருவரும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் குழுவினரும் நேற்று தெரிவுக் குழுவில் முன்னிலையானார்கள். பொய்யான தகவல் அல்லது பொய்யான செய்திகள் வரம்பில்லா மல் பலருக்கும் எப்படி பரப்பப்படு கின்றன என்பதுதான் இந்தப் பிரச்சினையில் இருக்கக்கூடிய உண்மையான குறும்புத்தனம் என் பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சூய் யி சோங் என்ற வழக் கறிஞரும் லிண்டன் சூ, குமாரி சென் லிசின், ஆரோன் யோங் ஆகிய மூன்று இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களும் தெரிவுக் குழுவிடம் கருத்துக் கூறினர். சமூக ஊடகத் தளங்களில் இடம்பெறும் பொய் செய்திகள் மக்களை எட்டுவதைத் தடுப்பதற் கான மூன்று முன்மாதிரிகளை அவர்கள் குறிப்பிட்டார்கள். சமூக ஊடகத் தளங்களுக்குப் பரந்தளவில் பாதுகாப்பு அளிப்பது, தாங்கள் பரப்பும் செய்திகளுக்கு அவையே பொறுப்பு என்று ஆக்கா மல் விடுவது, அவை தங்களுடைய தளங்களைக் கண்காணிக்க வேண்டியதை தேவையில்லாமல் செய்வது ஓர் ஏற்பாடு.

