தோ டக் ரோட்டில் உள்ள டுடோர் பாணி வரிசை வீட்டில் வசிக்கும் உரிமையாளர்கள், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அவரின் டுடோர் பாணி வீட்டை இடித்துவிட்டு பதிலாக சமகால வீடு ஒன்றைக் கட்டியிருப்பது பற்றி கவலை அடைந்து இருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் நகர மறுசீரமைப்பு ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தலையிடும்படி அவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். புதிய பக்கத்து வீட்டுக்காரர் அந்தப் பகுதியின் தோற்றத்தையே பாழடித்துவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். புதிய கட்டடம் தன்னுடைய சுவரைச் சேதப்படுத்திவிட்டதாக ஒருவர் தெரிவித்து இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தோற்றமே பாழாகிவிட்டதாக கவலை
1 mins read
-

