'தாமின் கட்டுரை பாரபட்சமானது'

'தாமின் கட்டுரை பாரபட்சமானது'

1 mins read

ம க் க ள் செயல் கட்சி அரசியல் எதிரிகளைத் தடுப்புக் காவலில் வைக்க 'பொய்யான செய்திகளைப்' பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய கல்வி ஆய்வாளர் தாம் பிங் ஜின், பாரபட்சமற்ற வரலாற்று ஆய்வாளருக்குரிய தரத்தை நிலைநாட்டத் தவறிவிட்டதைத் தெளிவாக எடுத்துரைக்க உள் துறை அமைச்சர் திரு கா.சண்முகம் நேற்று கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் செலவிட்டார். முடிவில், டாக்டர் தாம் தான் எழுதிய ஆய்வறிக்கையின் சில பகுதிகள் மாற்றி அமைக்கப் பட்டிருக்கலாம் என்பதை அவரே ஒப்புக்கொள்ள செய்தார் திரு சண்முகம்.

சென்ற 1963ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் கோல்ட்ஸ்டோர்' அதிரடி நடவடிக் கையைப் பற்றி டாக்டர் தாம் எழுதிய ஆய்வறிக்கை குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பினார். அந்நடவடிக்கையின்போது நூற் றுக்கும் மேலான கம்யூனிஸ்ட் ஆதரவுத் தொண்டர்களும் கம்யூ னிஸ்ட்டுகள் எனச் சந்தேகிக்கப் பட்டவர்களும் கைது செய்யப் பட்டனர். சிங்கப்பூர் அரசாங்கத்திடமி ருந்து ஆட்சியைப் பறிப்பதற்கான வன்முறையான கம்பூனிஸ்ட் சதித்திட்டம் எதிலும் கைதானவர் கள் சம்பந்தப்பட்டிருந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று ஆய்வறிக்கையில் டாக்டர் தாம் குறிப்பிட்டிருந்தார்.