ஆசியான் நிதி அமைச்சர்கள் சிங்கப்பூரில் அடுத்த வாரம் கூடுகிறார்கள். வளர்ச்சியைக் கட்டிக்காப்பது, மீட்சித் திறனைப் பெருக்குவது, புத்தாக்கத்தைப் பேணி வளர்ப்பது ஆகியவற்றுக்கான வழிகள் பற்றி அமைச்சர்கள் ஆராய்வார்கள் என்று சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். எட்டாவது உலக வங்கி=சிங்கப்பூர் உள்கட்டமைப்பு நிதித்துறை உச்சநிலை மாநாட்டை ஏப்ரல் 5ஆம் தேதி சிங்கப்பூர் நடத்துகிறது. ஆசியான் நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக 2016 முதல் 2030 வரை US$2.8 டிரிலியன் (S$3.67 டிரிலியன்) தேவைப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த நிதியை அரசாங்கமே ஏற்படுத்தித் தருவது இயலாத காரியம். ஆகையால் தனியார் நிதியைச் சிறந்த முறையில் திரட்டுவது பற்றி அமைச்சர்கள் ஆராய வேண்டியிருக்கும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
வளர்ச்சி, மீட்சித்திறன், புத்தாக்கத்தில் ஆசியான் நாட்டம்
1 mins read

