சிறந்த தலைவராக உதவும் பயிற்சிப் பள்ளி

சிறந்த தலைவராக உதவும் பயிற்சிப் பள்ளி

1 mins read
48f293fd-9b17-4945-a57b-91f2dee28a09
-

முஹம்மது ஃபைரோஸ்

முழுநேர தேசிய சேவையில் கிடைக்கும் அனுபவத்தை நன்கு பயன்படுத்தி வாழ்க்கைக்குத் தேவையான பண்பு நெறிகளைப் பேணி வளர்க்கவேண்டும் எனத் தந்தை அடிக்கடி கூறிய அறிவுரை யைச் செவிசாய்த்து அதற்கான பலனைப் பெற்றுள்ளார் இரண்டாம் லெஃப்டினன்ட் பிரையண்ட் பெஞ்சமின் சேவியர், 20. "எனது தந்தை ராணுவத்தில் சேவையாற்றியபோது அவருக்குக் கிட்டிய அனுபவங்களை என் னிடம் பகிர்ந்துகொண்டபோது என்னுள் உற்சாகம் கரைபுரளும்," என்ற இவர், தேசிய சேவை அனு பவம் தன்னிச்சையாகச் செயல் படவும் ஒரு நல்ல குடிமகனாக சமுதாய முன்னேற்றத்திற்குப் பங் களிக்கவும் உதவும் என நம் பிக்கை தெரிவித்தார்.

அப்பர் ஜூரோங் சாலையில் அமைந்துள்ள சாஃப்டி ராணுவ பயிற்சிக் கழகத்தில் முழு அதி காரிகளாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட 160 அதிகாரிகளில் ஒருவர் இரண்டாம் லெஃப்டி னன்ட் பிரையண்ட். விக்டோரியா தொடக்கக் கல் லூரியில் மேல்நிலைக் கல்வியை முடித்துள்ள இவர், கடந்த ஆண்டு ஏப்ரலில் முழுநேர தேசிய சேவையில் சேர்ந்தார்.