கிராப்=ஊபர் நிறுவனங்கள் இணைந்திருப்பதில் போட்டித் தன்மை சட்டம் மீறப்பட்டு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்க நியாய மான காரணங்கள் இருப்பதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை ஆணையம் தெரிவித்து இருக் கிறது. சந்தையின் போட்டித் தன்மையை நிலைநாட்டுவதற்கான இடைக்கால நடவடிக்கைகளை இந்த ஆணையம் உத்தேசித்து இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை அமல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன் பாக, தங்கள் நிலைகளைத் தெரி யப்படுத்துமாறு இந்த ஆணையம் அந்த நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
ஊபர் நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய தொழில் பாத்திய தையை கிராப் நிறுவனம் கொள் முதல் செய்தது பற்றி இந்த ஆணையம் மார்ச் 27ஆம் தேதி ஆராயத் தொடங்கியது. இந்தக் கொள்முதல் உடன்பாடு பற்றி மார்ச் 26ஆம் தேதி அறி விக்கப்பட்டது. அதன் தொடர்பான பரிவர்த்தனை பற்றி அந்த நிறு வனங்கள் இந்த ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த உடன்பாடு காரணமாக சிங்கப்பூரில் தனியார் வாடகை கார் தொழில்துறைக்கான போட் டித்தன்மை கணிசமான அளவு குறைய வழி ஏற்பட்டுவிடக்கூடும் என்று ஆணையம் வெள்ளிக் கிழமை தெரிவித்தது.

