புக்கிட் தீமா காட்டில் போர்க்கால பொருள்

புக்கிட் தீமா காட்டில் போர்க்கால பொருள்

1 mins read
118ab4e4-7189-4b04-a0e9-8e006855b6c0
-

புக்கிட் தீமா காட்டுப் பகுதியில் போர்க்காலப் பொருள் ஒன்று நேற்று காலை நேரத்தில் காணப் பட்டது. அதனையடுத்து அந்தப் பொருள் காணப்பட்ட பகுதியைச் சுமார் 5 மணி நேரத்திற்கு போலிசார் சுற்றி அடைத்தனர். அந்தப் பகுதியில் காலை சுமார் 7.08 மணிக்குப் போர்க்காலப் பொருள் ஒன்று காணப்பட்டதாக தங்களுக்குத் தகவல் வந்தது என்று போலிஸ் தெரிவித்தது. அந்தப் பொருள் மூன்று அங்குல நீளத்திற்கு உருளை வடிவத்தில் தோன்றியதாக அதைப் பார்த்த ஒருவர் ‌ஷின் மின் டெய்லி செய்தித்தாளிடம் குறிப்பிட்டார்.