தமிழார்வத்தைத் தூண்டும் ஒரு மாத விழா

தமிழார்வத்தைத் தூண்டும் ஒரு மாத விழா

1 mins read

முத்தமிழையும் சுவைக்க வாய்ப் பளிக்கும் ஒரு மாதத் தமிழ்க் கொண்டாட்டம் இன்று தொடங்கு கிறது. பல்வேறு தரப்பினரும் பயன்பெறக்கூடிய வெவ்வேறு நிகழ்ச்சிகள். 29ஆம் தேதி வரை நடைபெறும் இவ்வாண்டு விழா வில் மொத்தம் 58 நிகழ்ச்சிகள். இசை, நாடகம், பாட்டு, சொற் பொழிவுகளுடன் அறிவியலில் தமிழ், உணவில் தமிழ், வணி கத்தில் தமிழ் என்று இலக்கியத் திற்கு அப்பாலும் மொழிப் புழக் கத்திற்கான தேவையை உணர்த் தும் வகையில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை மேம்படுத்தி வரு வதாக தமிழ் முரசிடம் தெரிவித் தார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு ஆர்.ராஜாராம். தொழிழ்நுட்பம், இணையம் வழி தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் இணை யக் கவிதைப் போட்டி, விளை யாட்டுப் போட்டிகள் போன்ற வற்றை இளையர்களே நடத்து வதையும் அவர் குறிப்பிட்டார்.

இளம் தலைமுறையினரிடமும் தமிழ்ப் புழக்கம் அதிகமில்லாத தமிழரிடமும் தமிழ்ப் புழக்கத்தை, ஆர்வத்தை வளர்க்கவும் தமிழை வாழும் மொழியாக நிலைநிறுத்த வும் சமூக அமைப்புகள் ஒன்றி ணைந்து 12வது ஆண்டாகத் தமிழ்மொழி விழாவைக் கொண் டாடுகின்றன. இந்த இடைவிடா முயற்சி நல்ல விளைவை ஏற்படுத்தி உள்ளது என்றார் திரு ராஜாராம். மாணவர்களும் இளையர் களும் குழுக்களாகவும் தனிப் பட்ட முறையிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் படைப்பதும் பங்கேற்பதும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதை தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு மு.ஹரிகிருஷ்ணன் சுட்டினார்.