புறாக்களால் தொல்லை அதிகரிப்பு

புறாக்களால் தொல்லை அதிகரிப்பு

1 mins read

புறாக்களால் குடியிருப்பாளர்கள் தொல்லைக்கு ஆட்படுவதாக மரின் பரேட் நகரமன்றம் புகார் களைப் பெற்றதை அடுத்து, அது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையத் தின் உதவியை நாடி இருப்பதாக நகரமன்றம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டிலிருந்து பாலாம் ரோட்டில் புறாக்களுக்கு உணவளிப்பது தொடர்பான 16 புகார்கள் இதுவரை பெறப்பட்டுள் ளதாக சிஎன்ஏவிடம் வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது. தீவு முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகரித்திருப் பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தீவு முழுவதிலுமிருந்து அத்தகைய 5,500 புகார்களைப் பெற்றதாக ஆணையம் தெரிவித்தது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34% அதிகம். 2016ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,100 ஆக இருந்தது.