பிடோக்குக்கு இடமாறும் ஃபேரர் பார்க் குத்துச்சண்டை சங்கம்

பிடோக்குக்கு இடமாறும் ஃபேரர் பார்க் குத்துச்சண்டை சங்கம்

1 mins read

ஃபேரர் பார்க்கில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்துவரும் சிங்கப்பூர் தொழில்முறையில்லாத குத்துச்சண்டைச் சங்கம் விரைவில் பிடோக் ஸ்போர்ட்ஸ் ஹாலுக்கு மாற்றப்படவுள்ளது. விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கும் இந்தப் பகுதியில் இருந்து குத்துச்சண்டை உடற்பயிற்சியகம், நீச்சல் பள்ளி ஆகிய வசதிகள் மாற்றப்படுகின்றன. குடியிருப்புப் பகுதியாக மாற்றம் காணவிருக்கும் ஃபேரர் பார்க் களம் உருமாற்றம் பெறுவதன் முதல்படியாக இது கருதப்படுகிறது. டோர்செட் ரோட்டுக்கும் நார்த்தம்பர்லேண்ட் ரோட்டுக்கும் இடையில் 9 ஹெக்டர் பரப்பளவில் இந்த நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் தேசிய விளையாட்டு முகவையான ஸ்போர்ட் சிங்கப்பூர் அந்த இடத்தை 2020ஆம் ஆண்டு மத்தியில் அரசிடம் ஒப்படைக்கவேண்டும். அங்கிருக்கும் அனைத்து கட்டமைப்புகளும் அதற்குள்ளாகத் தகர்க்கப்பட வேண்டும்.