பண்ணைகளை சூறையாடிய காற்று

பண்ணைகளை சூறையாடிய காற்று

1 mins read

சிங்கப்பூரில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்று நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. அந்தச் சூறாவளிக் காற்றால் லிம் சூ காங்குக்கு அருகில் உள்ள பல பண்ணைகள் பெரிதும் பாதிக் கப்பட்டன. நேற்று முன்தினம் பிற்பகல் 3.50 மணியளவில் தெங்காவில் மணிக்கு 133.3 கி.மீ. என்ற அதிக மான வேகத்தில் பலத்த காற்று வீசியதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு சேவை நிலையம் நேற்று தெரிவித்தது.

இதற்கு முன்பு 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தெங்காவில் 144.4 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது ஆக அதிக வேகமான காற்றாக பதிவாகி உள்ளது. கோழிப் பண்ணைகள், நாற்றங் கால் பண்ணைகள் என லிம் சூ காங் பகுதியில் அமைந்திருக்கும் பல பண்ணைகள் ஆகியன நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 முதல் மாலை 5 மணி வரை பெய்த மழையின்போது பெரிதும் பாதிப் புக்கு உள்ளாகின. ஜூரோங், சுவா சூ காங் போன்ற தீவின் மேற்குப் பகுதிகளில் அன்றைய தினம் கனத்த மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு சேவை நிலையம் தெரிவித்தது.

சேதமுற்ற பண்ணைகளை சுத்தப்படுத்தி மறுசீரமைக்க அர சாங்க முகவைகள் ஆதரவு வழங் கும் என்று வர்த்தக தொழில், தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் கூறியுள்ளார். லிம் சூ காங் கல்லறைக்கு அருகில் முராய் ஃபார்ம்வேயில் அமைந்துள்ள, பாதிக்கப்பட்ட பண்ணைகளை நேற்று டாக்டர் கோ பார்வையிட்டார்.