நாணய வர்த்தகரிடம் பணிபுரிந்து வந்த 43 வயது பகுருதீன் குத்பு தீன் சுமார் அரை மில்லியன் வெள்ளி ரொக்கப் பணத்துடன் தலைமறைவாகி, பின்னர் மலேசியா வில் பிடிபட்டதை அடுத்து நேற்று நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஓர் ஊழியராக நம்பிக்கை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி யாகப் பணிபுரியும் அந்த இந்திய நாட்டவர், $469,000 ரொக்க காசோலையை வங்கியிலிருந்து எடுத்து அவரது உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும். ஆனால் அவர் அதை எடுத்துகொண்டு மலேசியாவிற்குத் தப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பகுருதீன் குத்புதீன், மத்திய போலிஸ் பிரிவில் ஒரு வாரத் திற்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நீதிமன்றத் திற்கு மீண்டும் கொண்டுவரப் படுவார்.
$470,000 ரொக்கப் பணத்துடன் தலைமறைவான 43 வயது பகுருதீன் குத்புதீன் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

