தனது அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களாகவும் வெவ்வேறு வகையான நிபுணத் துவம் கொண்டவர்களாகவும் வாழ்க்கை மற்றும் சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து வெவ்வேறு கருத்துகள் கொண்டவர்களாகவும் இருப்பதை சிங்கப்பூர் உறுதி செய்ய வேண்டும் எனக் கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்துள்ளார். இதில் சிங்கப்பூர் அவ்வளவு சிறப்பாகச் செய்யவில்லை என்றும் இன்னும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி னார்.
பல்வகை கருத்துகள், நிபுணத் துவம் போன்றவை நீண்டகால அடிப்படையில் சிங்கப்பூருக்கு உதவியாக இருக்கும் என்றார் அவர். 'இடையூறுமிக்க உலகில் செழிப்புடன் இருத்தல்' என்ற கருப்பொருள் கொண்ட இளையர் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஓங்கின் உரை அமைந்தது. சிங்கப்பூரின் உயர் பட்டதாரிகள் ஒரே மாதிரியான பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பதை தாம் கவனித்து வருவதாகக் கருத்தரங்கில் பங்கெடுத்த அந்தப் பெண் அமைச்சரிடம் கூறினார். இதனால் அவர்கள் அனை வருக்கும் ஒரே மாதிரியான கருத் துகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த நிலையை எவ்வாறு சமாளிப்பது என்றும் அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

