சைக்கிள், தனிநபர் நடமாட்டக் கருவிகளை ஓட்டுபவர்கள் நடை பாதைகளிலும் கூட்டமான இடங் களிலும் பயணம் செய்யும்போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் நாடப்படுகின்றன. தற்போது பரிந்துரைக்கப்படும் மணிக்கு 15 கிலோமீட்டர் உச்ச வேகத்தைவிட அவர்கள் மெது வாக ஓட்ட வேண்டுமா என்பது பற்றிய கருத்துகள் இதில் உள்ள டங்கும். இவ்விவகாரங்களின் தொடர் பில் கருத்து சேகரிக்க நடமாட்ட ஆலோசனைக் குழு இணைய ஆய்வை நேற்று தொடங்கியது.
இக்குழு ஈராண்டுகளுக்கு முன் தயாரித்த விதிமுறைகளையும் நடத்தை முறைகளையும் தற்போது மறுஆய்வு செய்கிறது. மின்=ஸ்கூட்டர் போன்ற தனிநபர் நடமாட்டக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதும் இவை சம்பந்தப்பட்ட விபத்துகள் கவலையளித்து வருவதும் மறுஆய்வுக்கான காரணங்கள். தற்போது சராசரியாக ஒரு வாரத்தில் மூன்று விபத்துகள் நடக்கின்றன. "சைக்கிள் ஓட்டுநர்கள், தனிநபர் நடமாட்டக் கருவிகளைப் பயன்படுத்துவோர் அல்லது பாதசாரிகள் உட்பட, பாதைகளைப் பயன்படுத்தும் அனைவரும் சிங்கப்பூரில் பாதுகாப்பான நட மாட்டக் கலாசாரத்தை உருவாக்க பங்காற்றவேண்டும்," என்று குழுவின் தலைவரான இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் ஃபேஸ்புக்கில் நேற்று கருத்துரைத்தார்.
நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் ஆகியவற்றின் பயன் பாட்டுக்கான விதிமுறைகளைத் தயாரிக்க 2015இல் அமைக்கப்பட்ட 14 உறுப்பினர்கள் கொண்ட குழுவைப் பேராசிரியர் ஃபைசால் வழிநடத்துகிறார்.

