கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சிறுவர்களுக்கான 'சான் டியேகோ ஸ` கிட்ஸ்' எனும் ஒளிவழி ஒளிபரப்பப்படுகிறது. விலங்குகள் பற்றிய அந்த ஒளிவழி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறாருக்குப் பொழுதுபோக்காகவும் விலங்குகள் பற்றி கற்பிப்பதாகவும் அமையும். ஜூரோங் பறவைப் பூங்கா, நைட் சஃபாரி, ரிவர் சஃபாரி, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் ஆகியவற்றின் விலங்கு தொடர்பான கதைகளும் ஒளிபரப்பப்படும். வர்த்தகரும் கொடையாளருமான டி.டேனி சேன்ஃபர்ட் வழங்கிய நிதி மூலம் இந்த ஒளிவழி ஒளிபரப்பப் படுகிறது. 'சான் டியேகோ ஸ` கிட்ஸ்' ஒளிவழியின் அறிமுக நிகழ்ச்சி நேற்று கேகே மருத்துவமனையில் நடைபெற்றது. அதில் விலங்கு களையும் பறவைகளையும் பார்த்து மகிழ்ந்த சிகிச்சை பெறும் சிறுவர்களில் 19 மாத கேடன் டி சில்வாவும் (இடமிருந்து இரண்டாவது) ஒருவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கேகே மருத்துவமனையில் சிறாருக்காகப் புதிய ஒளிவழி
1 mins read
-

