நாடாளுமன்றம் நேற்று முதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுகிறது. அடுத்து மாதம் 7ஆம் தேதியன்று அது மீண்டும் கூடு கிறது. நாடாளுமன்றம் அடுத்த மாதம் மீண்டும் கூடும்போது அதிபர் ஹலிமா யாக்கோப் உரையாற்றுவார். அவரது உரையை நான்காம் தலைமுறை அமைச்சர்கள் வரை வர். அதிபரின் உரையை நான் காம் தலைமுறை அமைச்சர்கள் வரைவது இதுவே முதல்முறை. எனவே, அதிபரின் உரை மிகவும் உன்னிப்பாகக் கவனிக் கப்படும் என்று கூறப்படுகிறது. எஞ்சியிருக்கும் இரண்டரை ஆண்டுகாலத் தவணைக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அதிபரின் உரையில் தெரிவிக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டு உரையின்போது தெரிவித்திருந் தார். "அதிபரின் உரையில் கூடு தல் பொறுப்பேற்று சிங்கப்பூருக் காக தங்களது யோசனைகளை முன்வைக்கும் நான்காம் தலை முறைத் தலைமைத்துவத்தின் அடையாளம் இருக்கும். அவர் கள் வரையும் அதிபர் உரையின் வாயிலாக அவர்களைப் பற்றியும் அவர்களது எண்ணங்கள் பற்றியும் சிங்கப்பூர் அறிந்து கொள்ளலாம்," என்று பிரதமர் லீ தெரிவித்திருந்தார்.
இந்த அதிபர் உரைக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. அதிபர் ஹலிமா யாக்கோப்பின் முதல் அதிபர் உரையாக இது அமையும் என்பது குறிப்பிடத் தக்கது. நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பிறகு அடுத்த முக்கிய அரசியல் பணியாக அமைச்சரவை மாற்றம் நடத்தப்படும். இளம் அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளையும் அனு பவத்தையும் தர இந்த அமைச் சரவை மாற்றம் செய்யப்படும் என்று திரு லீ குறிப்பிட்டிருந்தார். "இதன் வழி, எனக்குப் பிறகு பிரதமர் பொறுப்பேற்பவருக்குக் கூடுதல் வலிமைமிக்க, அனுபவம் கொண்ட அமைச்சர்களின் ஆதரவு கிடைக்கும். இவர்கள் சிங்கப்பூருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர கடப்பாடு கொண்டவர்களாக இருப்பர்," என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப் பிட்டிருந்தார்.
நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன் கள்) ஓங் யி காங் ஆகியோர் நான்காம் தலைமுறை அமைச்சர் களுக்குத் தலைமை தாங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் நான்காம் தலைமுறை அமைச்சர் களுக்குக் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டை வழிநடத்தும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நடைபெற இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் நான்காம் தலைமுறை அமைச்சர் களுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படாது என்று நம்பப்படு கிறது. சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் 2021ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும்.

