தொழிலதிபர் ராஜேந்தர் பிரசாத் ராய் விடுவிக்கப்பட்டார்

1 mins read

ஐரோப்பாவில் கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடந்த ஆறு காற்பந்து விளையாட்டு களின் முடிவைச் சட்டவிரோதமாக நிர்ணயிக்க, ஸ்ரீ மனிஷ் கல்ரா என்ற தன் உறவினருடன் சேர்ந்து சதித்திட்டமிட்டதாகக் கூறப்பட்ட ராஜேந்தர் பிரசாத் ராய், 44, என்ற தொழிலதிபரை உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுவித்தது. மாவட்ட நீதிமன்றம் அவரைக் குற்றமற்றவர் என்று சென்ற ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. அத் தீர்ப்பை நேற்று உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ராஜேந்தர் சுதந்திர மனிதராக நேற்று வெளியே வந்தார். ராஜேந்தரை எல்லா குற்றச் சாட்டுகளிலிருந்தும் மாவட்ட நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து அரசுத் தரப்பு செய்திருந்த முறை யீடு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை மாற்றுவதற்குப் போதிய ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி அரசுத் தரப்பு முறையீட்டை நீதிபதி தள்ளுபடி செய்தார்.