நன்யாங் பள்ளியின் விடுதி திட்டம் தற்காலிக நிறுத்தம்

நன்யாங் பள்ளியின் விடுதி திட்டம் தற்காலிக நிறுத்தம்

1 mins read

நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தன்னுடைய விடுதி அறி முகச் செயல்திட்டத்தை ஒரு வார காலத்திற்குத் தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி காரணமாக அந்தப் பள்ளியைச் சேர்ந்த 110 மாணவிகள் சென்ற வாரம் பாதிக்கப்பட்டதையடுத்து பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது. புதிதாக எந்த மாணவியும் பாதிக்கப்படவில்லை என்று நேற்று இந்தப் பள்ளி தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. பள்ளி நிர்வாகம், சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. மாணவிகள் பாதிக்கப்பட்ட தற்கு மூல காரணம் என்ன என் பதைக் கண்டறிய அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து இந்தப் பள்ளிக்கூடம் புலன்விசாரணை நடத்திவருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி விடுதியில் தங்கியிருந்தனர். தங்களுக்குத் தாங்களே சுதந் திரமாக, சுயமாக வாழ்வது எப்படி என்பதைப் பற்றி உயர்நிலைப்பள்ளி இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவிகளுக்குக் கற்பிப்பதற்காக இந்தப் பள்ளிக்கூடம் நான்கு வாரச் செயல்திட்டம் ஒன்றை நடை முறைப்படுத்தி வருகிறது. அந்தச் செயல்திட்டத்தின் மூலம் மாணவிகள் பள்ளிக்கூட விடுதிகளில் தங்கிப் படிக்கும் அனுபவங்களைப் பெறுகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் திங்கட் கிழமை அன்றே பள்ளிக்குத் திரும்பி விட்டார்கள்.

110 மாணவிகள் பாதிக் கப்பட்டதை அடுத்து நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தனது விடுதி அறிமுகத் திட்டத்தை ஒரு வாரத்துக்கு நிறுத்தி இருக்கிறது.