புக்கிட் தீமா விரைவுச் சாலையில் இருக்கும் மேம்பாலச் சாலை ஒன்றின் கீழே சாலையோரத் தடத்தில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்த எட்டு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் மீது வேன் ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை மோதினார். சென்ற ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் மாண்டனர். மழைக்காக தங்கள் வாகனங்களுடன் ஒதுங்கி நின்றிருந்தவர்கள் மலேசியாவைச் சேர்ந்தவர் கள். அவர்களில் ஐந்து பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பினார். வேனை ஓட்டி வந்த கோ பூன் பிங், 25, என்ற சிங்கப்பூர ரான ஆடவர், நீதிமன்றத்தில் இந்தச் சம்பவம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். மூன்றாவது குற்றச்சாட்டு, தண்டனை விதிக்கப்பட்ட போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கோவுக்கு 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாண்டு காலத்திற்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டக் கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
வாகன ஓட்டுநருக்கு 12 வாரச் சிறை
1 mins read

