இம்மாதத் தொடக்கத்தில் முஸ் லிம்களின் உணர்வைப் புண்படுத் தும் வகையில் கருத்துக் கூறிய தாக சர்ச்சையில் சிக்கியுள்ள அமெரிக்க கிறிஸ்துவப் போதகர் லோ எங்கிளை விசாரணைக்காக சிங்கப்பூர் திரும்பும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக போலிஸ் தெரி வித்துள்ளது. 'கிங்டம் இன்வேஸன் மாநாடு 2018'ல் கலந்துகொண்டு உரை யாற்றிய திரு எங்கிள், அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நாடு திரும்பி விட்டதாக போலிஸ் அறிக்கை கூறுகிறது.
"விசாரணை நடந்துகொண்டு இருப்பதால் மேற்கொண்டு எதுவும் கூற இயலாது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூத்த பாதிரியாரும் 'கார்னர் ஸ்டோன் கம்யூனிட்டி' தேவாலயத் தின் இணை நிறுவனருமான யாங் டக் யூங், திரு எங்கிளின் கருத் துகளுக்காக முஸ்லிம் சமூகத் திடம் மன்னிப்புக் கோரினார். அத்துடன், எதிர்காலத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் இஸ்லாமிய மையத் தில் முஃப்தி முகம்மது ஃபத்ரிஸ் பக்காரமையும் முஸ்லிம் தலைவர் களையும் சந்தித்தபின் அவர் இதனைத் தெரிவித்தார்.

