சிராங்கூன் ரோடு, பெங் வான் ரோடு, பெண்டமியர் ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் காலையில் வீடுகளுக்கு வந்த தண்ணீர் நிறம் மாறி, கலங்கலாக இருந்ததைக் குடி யிருப்பாளர்கள் கண்டனர். இப்போது அந்தப் பிரச்சினை ச ரி செய்யப்பட்டு விட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. கலங்கலான நீரைப் பயன் படுத்தவேண்டாம் என்றும் அதற் குப் பதிலாக புளோக்குகள் 44 முதல் 49க்கு அருகே அமைக் கப்பட்ட நீர் சேகரிப்பு முனை களில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து நீர் வண்டிகளில் இருந்து தூய நீரைப் பிடித்துக்கொள்ளுமாறும் அந்த வட்டாரங்களின் குடியிருப் பாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். செவ்வாய்க்கிழமை காலை 10.37 மணிக்கு ஜோ ஈ என்ற ஃபேஸ்புக்வாசி பதிவிட்ட புகைப் படத்தில் பெண்டமியரில் பொது மக்கள் தண்ணீருக்காக வரிசை யில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.
சிராங்கூன், பெண்டமியரில் கலங்கலாக வந்த தண்ணீர்
1 mins read

