ஊதிய உயர்வு பெறவிருக்கும் சமூக சேவை ஊழியர்கள்

1 mins read

சமூக சேவைத் துறையில் பணி புரிவோரின் ஊதியம் மீண்டும் உயரவிருக்கிறது. புதிய ஊதிய வழிகாட்டி நெறி முறைகள் தேசிய சமூக சேவை மன்றத்தில் இணையத் தளத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி, பல்கலைக்கழகத் தில் இருந்து வெளியாகும் புதிய பட்டதாரி சமூகப் பணியாளரின் தொடக்க ஊதியம் 4% அதி கரித்து, $3,400ஆக உயர்கிறது. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியில் பட்டம் பெற்றவர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழ கத்தில் சமூகப் பணியை முக் கியப் பாடமாக எடுத்து, சமூக அறிவியலில் பட்டம் பயின்றோரும் அவர்களில் அடங்குவர்.

இயன்மருத்துவத்தில் பட்டம் பெற்ற சிகிச்சை நிபுணர்கள் அல்லது பேச்சு, மொழிப் பயிற்சி வழங்குவோரின் தொடக்க ஊதி யம் 6% கூடி, $3,550 ஆகிறது. உடற்குறையுள்ள குழந்தைகளு டன் பணியாற்றும் சிறப்புக் கல்வி ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில், பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் தொடக்க ஊதியம் $3,570லிருந்து $3,620ஆக உயர்கிறது. தேசிய கல்விக் கழகத்திலிருந்து சிறப்புக் கல்வி பட்டயம் பெற்றவர்களும் இவர்களில் அடங்குவர். இந்த ஊதிய உயர்வு குறித்து கடந்த மாதம் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதிஒதுக்கீட்டு விவாதத்தின்போது முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.