இந்திய கலாசார விழாவில் உணவு வீணாவதைத் தடுக்க புதிய செயலி

இந்திய கலாசார விழாவில் உணவு வீணாவதைத் தடுக்க புதிய செயலி

1 mins read

உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கமுடைய லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் இனிமேல் இணையச் சந்தைத் தளம் மூலமாக அவற்றை வாங்க விரும்பு பவர்களுடன் தொடர்புபடுத்தப் படலாம். காலாவதியாவதற்குக் குறுகிய காலமே இருக்கக்கூடிய காய்கறி கள், பழங்கள் போன்றவற்றை 'லஸ்மின்' எனும் அந்த வலைத் தளம் வழியாக விற்பனை செய் யலாம். "உணவுப் பொருட்கள் வீணா வதைக் குறைக்க இந்தத் தளம் உதவும் என நம்புகிறோம். இதன் மூலம் கடைக்காரர்களின் இழப்பு குறைய வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் குறைந்த வருமானக் குடும்பத்தினர் உணவுப் பொருட் களை சரியான சமயத்தில் குறை வான விலையில் பெற முடியும்," என 'லஸ்மின்' இணையப் பக்கத்தின் நிறுவனர் டாக்டர் புனித் செஸ்த், 45, கூறினார்.

இந்த இணையப் பக்கம் வழியாக உணவுப் பொருட்களை வாங்குவோர் கடைக்காரர்களிட மிருந்து பொருட்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வர்.