மேலும் பல துறைகளில் படிப்படியாக உயரும் சம்பள முறை

மேலும் பல துறைகளில் படிப்படியாக உயரும் சம்பள முறை

1 mins read

துப்புரவு, பாதுகாப்பு, நிலவனப்பு துறைகளில் அமல்படுத்தப் பட்டிருந்த படிப்படியாக உயரும் சம்பள முறை நல்ல மேம்பாடு கண்டிருப்பதாகவும் அந்த முறையை மேலும் பல துறைகளுக் கும் நீட்டிக்கலாம் என்றும் மனிதவள துணை அமைச்சர் சேம் டான் நேற்று கூறினார். முதல் கட்டமாக மின்தூக்கி நிறுவனங்களும் தொழிற் சங்கமும் கட்டட கட்டுமான ஆணையத்தோடு சேர்ந்து மின்தூக்கி தொழில்நுட்பர்களுக்கு இந்த முறையை அறி முகம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதற்கு அமைச்சு ஆதரவு வழங்கி வருவதாகவும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் தேவையால் இந்தப் படிப்படியாக உயரும் சம்பள முறை நல்ல விளைவை ஏற்படுத்தும் என்றும் திரு டான் கூறினார். குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு திறன்கள் மேம்பாடு மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு அடிப்படையில் சம்பளத்தை உயர்த்த இந்த முறை உதவுகிறது. ஊழியர்களின் திறன் மற்றும் அனுபவ நிலை அடிப்படையில் ஆரம்ப சம்பளமும் இந்த முறையின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.