வேலையிடத்தில் பாலியல் துன்புறுத்தல்: தடுப்பதற்கு மேலும் முயற்சி தேவை

வேலையிடத்தில் பாலியல் துன்புறுத்தல்: தடுப்பதற்கு மேலும் முயற்சி தேவை

1 mins read

வேலையிடங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு மேலும் முயற்சிகள் தேவை என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கருத்துரைத்தனர். வேலையிடங்களில் துன்புறுத்தல்கள் சென்ற ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுகளை விட அதிகளவில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் பலர் துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும் உறுப்பினர்கள் கூறினர். துன்புறுத்தல்கள் நடந்தால் எவ்வாறு அதை சமாளிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நியமன உறுப்பினர் குமாரி தனலெட்சுமி பரிந்துரைத்தார்.