காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவிருக்கும் தேசிய கல்வி பாடத்திட்டம்

காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவிருக்கும் தேசிய கல்வி பாடத்திட்டம்

1 mins read

பள்ளிகளில் தற்போது கற்பிக்கப்படும் தேசிய கல்வி பாடத்திட்டம் மாறுபட்ட கண்ணோட்டங்களையும் தற்கால விவகாரங்களையும் உள்ளடக்கி புதுப்பிக்கப்படும் என்று கல்வி மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நேற்று தெரிவித்தார். மாறிவரும் உலக சமூக, பொருளியல், அரசியல் சூழ்நிலையில் மாணவர்களைக் குடிமக்களாக மேம்படுத்து வதே அண்மையில் நிறைவுபெற்ற மறுஆய்வின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பாடத் திட்ட மாக தேசிய கல்வி விளங்கும் என்றும் மாணவர்களின் தேவையைப் பொறுத்து பள்ளிகள் மாற்றங்களை ஏற்படுத்த அதிகாரம் வழங்கப்படும். சிங்கப்பூரர்களாக இருப்பது குறித்த மாணவர்களின் குடியுரிமை அனுபவங்களைச் சிந்தித்து கருத்துரைக்க ஊக்கமளிக்கப்படும்.