$4,500க்கு மேல் வருமானம் பெறுவோரும் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுவார்கள்

$4,500க்கு மேல் வருமானம் பெறுவோரும் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுவார்கள்

1 mins read

உயர் சம்பளம் பெறும் ஊழியர்களும் சம்பளமுள்ள மருத்துவ விடுப்பு, நியாயமற்ற வேலை நீக்கலுக்கான இழப்பீடு போன்றவற்றிற்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்திட, வேலை நியமனச் சட்டம் மறுஆய்வு செய்யப்படுகிறது. வேலை நியமனச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் இந்த உரிமைகள், தற்போது மாதத்திற்கு $4,500 வரையிலான வருமானம் ஈட்டும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகி கள் ஆகியோருக்கும் இவையல் லாத வேலைகளில் இருப்போருக் கும் மட்டுமே பொருந்துகின்றன. ஆனால், சம்பள வரம்பு நீக் கப்பட்டால், மேலும் 430,000 நிபு ணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பயனடைவார்கள்.

தற்போதுள்ள 720,000 நிபு ணர்கள், மேலாளர்கள், நிர்வாகி களில் இது பாதிக்கும் அதிகம். மனிதவள அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே இதுபற்றி அறிவித்தார். வேலை நியமனச் சட்டத்தின் மறுஆய்வு பற்றி வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் பேட் ரிக் டேயும் அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் இந்தான் மொக்தாரும் கேட்டிருந் தனர்.

சட்டத் திருத்தங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்குள் அமலாக்கப்படும். வேலை நியமனச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டால், அரசாங்க ஊழியர்கள், வீட்டுப் பணிப் பெண்கள், கடலோடிகள் தவிர்த்து மற்ற எல்லா தொழிலாளர்களுக்கும் சட்டப்படி பாதுகாப்பு கிடைக்கும் என்றார் திரு லிம். சட்டத்தின்கீழ் இடம்பெறாதவர் கள் தத்தம் வேலையின் இயல்பால் மற்ற சட்டங்களின் கீழ் பாதுகாக்கப் படுவதாக அவர் கூறினார்.