தோ பாயோ வீட்டில் 15 பேர்; வாடகைக்குவிட்டவர் கைது

தோ பாயோ வீட்டில் 15 பேர்; வாடகைக்குவிட்டவர் கைது

1 mins read

தோ பாயோவில் உள்ள ஒரு வீட்டை 15 பேருக்கு வாடகைக்குவிட்ட சீன நாட்டவரை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கைது செய்துள்ளது. சட்டவிரோதமாக ஊழியர் ஒருவரை வீட்டில் தங்க அனுமதித்த சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். தோ பாயோ லோரோங் 2ல் உள்ள மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டை திங்கள் காலை ஆறு மணியளவில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கிய நாற்பது வயது சீன நாட்டவர் உட்பட 15 பேர் வீட்டில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வொர்க் பர்மிட் ரத்தான நிலையில் சிங்கப்பூரில் தங்கியிருந்த அந்த ஊழியரும் கைது செய்யப்பட்டார். அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.