வெடிகுண்டு மிரட்டல்; ஸ்கூட் விமானத்தை இரு பக்கமும் சூழ்ந்த போர் விமானங்கள்

வெடிகுண்டு மிரட்டல்; ஸ்கூட் விமானத்தை இரு பக்கமும் சூழ்ந்த போர் விமானங்கள்

1 mins read

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டதைத் தொடர்ந்து ஸ்கூட் விமானத்தைக் கண்காணிக்க இரு போர் விமானங்களை சிங்கப் பூர் ஆகாயப் படை சில நிமிடங் களில் அனுப்பி வைத்தது. ஸ்கூட் விமானத்துக்கு நெருக்கமாக பறந்து சென்ற அவை, ஸ்கூட் விமானியுடன் தொடர்புகொண்டு பாதுகாப்புக்கு ஆகாயப்படையின் விமானங்கள் துணைக்கு வருவதாகத் தெரி வித்தது. "எங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே 'ஸ்கூட்' விமானியின் கவனத்தை ஈர்த் தோம். பின்னர் விமானத்தில் ஏதாவது வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கிறதா என்ப தைக் கண்காணித்தோம்," என்று போர் விமானத்தின் விமானி ஒருவர் கூறினார். கடந்த வியாழக்கிழமை மதியம் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

அதையடுத்து அன்று பிற்பகல் 1.20 மணியளவில் தாய்லாந்தின் ஹட் யாய் நகரை நோக்கிப் புறப் பட்ட இரு போர் விமானங்களும் பின்னர் திருப்பி வந்து கொண் டிருந்த ஸ்கூட் விமானத்துடன் சேர்ந்து கொண்டன. அதே நாள் பிற்பகல் 3.23 மணியளவில் போர் விமானங்களுடன் ஸ்கூட் விமானமும் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் மிரட்டல் விடுத்த 41 வயது ஆடவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.