விவேகமான போக்குவரத்துக்குத் திட்டமிட மோபைக் சைக்கிள் பகிர்வு நிறுவனமும் எஸ்எம் ஆர்டியும் கூட்டு சேர்ந்துள்ளன. இம்மாதம் 2ஆம் தேதி மோபைக் நிறுவனத்தை சீனாவின் ஆகப்பெரிய இணையச் சேவை நிறுவனமான 'மெய்டுவான் டயான் பிங்' பல பில்லியன் டாலருக்குக் கையகப்படுத்தியது. இந்நிலையில் மோபைக், எஸ்எம்ஆர்டியுடன் புதிய புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள பலதரப்பட்ட போக்குவரத்து வாய்ப்புகளை ஒருங்கிணைப்பதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இதன் கீழ் மோபைக்கும் எஸ்எம்ஆர்டியின் மொபிலிட்டி எக்சும் தங்களுக்கு இடையிலான பகுப்பாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்.
புதிய ஒப்பந்தம் பற்றி கருத் துரைத்த மோபைக்கின் அனைத் துலக நடவடிக்கைகளுக்கான தலைவர் மார்க் லின், "சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள், உள்ளூர் எஸ்எம்ஆர்டி 'மொபிலிட்டி எக்ஸ்' ஆகியவற்றுடன் சேர்ந்து செயல் படுவதில் பெருமை கொள் கிறோம்," என்றார். பயணிகளும் நிறுவனங்களும் பயணங்களுக்கான பலதரப்பட்ட வசதிகளைப் பற்றி ஒரே இடத்தில் தெரிந்துகொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 'மொபிலிட்டிஎக்ஸ்' அமைக்கப்பட்டது. இதற்கு குறிப்பிடப்படாத நிதி உதவியை எஸ்எம்ஆடி வழங்கி யிருந்தது. இந்நிலையில் மொபிலிட்டி எக்சின் தலைமை நிர்வாகி காலின் லிம், "சிங்கப்பூரில் ஒரு வீட்டி லிருந்து மற்றொரு வீட்டிற்குச் செல்வதற்கான நடமாட்ட வாய்ப்பு களில் சைக்கிள் பகிர்வுக்கு முக்கிய பங்கு உள்ளது," என்று குறிப்பிட்டார்.
மோபைக்கும் எஸ்எம்ஆர்டியின் மொபிலிட்டிஎக்சும் தகவல்களைப் பகுப்பாய்வுக்குப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

